“இத்தனை வருஷத்துல விக்கி என்கிட்ட அத கேட்டதே இல்லை” – கணவர் குறித்து நயன்தாரா பெருமை!
Author: Rajesh15 January 2024, 11:49 am
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான நயன்தார தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார்.
சமீபத்தில் femi9 என்ற நேப்கின் கம்பெனி ஒன்றை சொந்தமாக துவங்கி நடத்தி வருகிறார். அந்த பிராண்டின் ப்ரோமோஷன் விழாவில் நயன்தாரா பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது கணவர் விக்னேஷ் சிவன் குறித்து பேசிய அவர், “எப்பவுமே நம்ம காதில் விழுகிற ஒரு விஷயம் “எல்லா ஆணுடைய வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்க” ஆனால் ரொம்ப சந்தோஷமா இருக்கிற எல்லா பெண்களுக்கு பின்னாடியும் கண்டிப்பா ஒரு ஆண் இருப்பாங்க. ஆம், என் கணவரால் நாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
உதாரணம், நான் ரொம்ப வருஷமா சினிமால நடிச்சிட்டு இருக்கேன். நடுவுல தான் நான் விக்னேஷை மீட் பண்ணேன்.. கல்யாணம் பண்ணேன். நான் என்னைக்கு அவர மீட் பண்ணேனோ, அன்னைல இருந்து. என்னையும் , என் திறமைகளையும் ஊக்குவித்து இன்னும் மிகப்பெரிய விஷயங்கள் பண்ணனும்னு நெறய கற்றுக்கொடுப்பார். ஆனால், இத்தனை வருஷத்தில் ஒரு முறை கூட அவர்… இது ஏன் பண்றீங்க? அது எதுக்கு பண்றீங்க? என்று கேட்டதே இல்ல” என்று நயன்தாரா மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.