நல்லா கதறுங்க.. கனடாவிலும் கடை விரித்த நயன்தாரா.. போட்டோவே சும்மா அள்ளுதே..!
Author: Vignesh12 March 2024, 9:34 am
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடா வாழும் ரசிகர்களும் இன்று முதல் வாங்கி பயன்படுத்தலாம் என பதிவிட்டு வருகிறார்கள். சமீப காலமாகவே நயன்தாரா செய்யும் எந்த ஒரு செயலுக்கும் அதிகப்படியான நெகட்டிவ் கமெண்ட்களை வருகிறது. இந்நிலையில், ரசிகர்களும், அவங்க ஜெயிச்சு மேல போய்க்கொண்டே இருக்காங்க நீங்க இங்க கதறிக்கிட்டே இருங்க என கமெண்ட் போட்டு எல்லாரும் நயன்தாராவின் ஹியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.