தமிழ் சினிமாவின் தற்போதைய நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் சேர்ந்து பணியாற்றிய போது காதலிக்கத் தொடங்கினார்கள். விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தின் கதையை. நயன்தாராவை சந்தித்து கூறும்போது தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக பல பேட்டிகளில் கூட வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போது நெருங்கி பழகியதன் மூலமாக அவர் மீது காதல் ஏற்பட்டு இருவரும் பல வருடங்கள் காதலித்து பின்னர் பெற்றோர்கள் சமத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நயன்தாரா பேட்டி ஒன்றில் பேசியபோது, விக்னேஷ் சிவன் முதன் முதலில் படத்தின் கதையை என்னிடம் வந்து கூறும் போது ‘காதம்பரி’ என்ற பெண் காது கேட்காத பெண்ணாக இந்த படம் முழுக்க வருவாள் என்று சொன்னதும் அந்த பெண்ணின் கேரக்டர் மிகவும் பாவப்பட்ட ஒரு கேரக்டராக இருக்கும் என்று நினைத்து நான் அப்பாவி போல் மேக்கப் போட்டுக் கொண்டு பார்க்கவே பரிதாபமாக வந்து விக்னேஷ் சிவன் முன் நின்றேன்.
அதை பார்த்ததும் அவர் பயந்து போய்விட்டார். என்ன இப்படி மேக்கப் போட்டு இருக்கீங்க? என்று கேட்டார். உடனே நான் காது கேளாத பெண் தானே…? அதனால் பாவப்பட்ட மாதிரி தானே இருக்கணும் என்று சொன்னதும் இல்லை… இந்தப் படத்தில் “காதம்பரி”யை படம் முழுக்க அழகான பெண்ணாகவே காட்டப்போகிறோம். அவளுக்கு காது கேட்காது என்பதை ஒரு குறையாகவே இந்த படத்தில் நாம் காட்டப் போவது கிடையாது என விளக்கினார். அதன் பிறகு நான் மேக்கப் மாற்றி மிகவும் அழகாக வந்து நடித்தேன் படமும் சிறப்பாக வந்தது என நயன்தாரா கூறியிருந்தார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.