இன்னொரு திருமணம் செய்வதில் தப்பே இல்லை : பகீர் கிளப்பிய நயன்தாரா!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2024, 4:42 pm
இன்றைய தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்படுபவர் நயன்தாரா. தற்போது, அவர் “ராக்காயி” என்ற அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா உலகில் தனக்கென ஒரு நீங்கா இடத்தை பெற்றுக் கொண்டு, முன்னணி நடிகையாக இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
பிரபுதேவா குறித்து நடிகை நயன்தாரா ஓபன் டாக்
நயன்தாராவின் சினிமா வாழ்க்கையைத் தாண்டி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பல சர்ச்சைகள் எழுவது சாதாரணமாகவே உள்ளது. சமீபத்தில், தனுஷ் – நயன்தாரா விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு, “மூன்று குரங்குகள்” குறித்தும் அவர் தெரிவித்த கருத்துகள் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.
இதையும் படியுங்க: விஜய்யிடம் இருந்து விலகி இருங்க… திரிஷாவுக்கு அட்வைஸ்!
இந்த சூழலில், சில நாட்களுக்கு முன், ஒரு தனியார் ஆங்கில யூடியூப் சேனலுக்கு நயன்தாரா வழங்கிய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில், “சினிமா துறையில் இரண்டாம் திருமணங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். அப்போது இதுபோல் நடப்பது தவறு என்று எனக்குத் தோன்றியது இல்லை. அதற்கு முக்கிய காரணம், சினிமா துறை அப்படித்தான் செயல்படுகிறது. இப்போது அதை நான் தவறு என்று கூறவில்லை, ஆனால் அப்போது அது என் நிலைப்பாடாக இருந்தது,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துகளை எதிர்த்து, சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் நயன்தாரா இந்த கருத்தை மறைமுகமாக பிரபுதேவாவை வைத்து பேசியுள்ளார் எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.