திரிஷா கூட இது தான் பிரச்சனை… Friendனு சொல்ற அளவுக்கு தகுதி இல்லை.. நயன்தாரா ஓபன் டாக்..!
Author: Vignesh21 August 2023, 12:08 pm
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காமல் போனது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் திரிஷா. ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.
ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா
அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் கலவையான விமர்சனங்கள் பெறுவதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவின் ரோலில் முதலில் நடிக்க இருந்தது த்ரிஷா தான் என்றும் திரிஷாவை தான் விக்னேஷ் சிவன் முதலில் யோசித்து வைத்தார் என்றும் ஆனால், த்ரிஷாவை இந்த படத்தில் நடிக்க விடாமல் செய்தது நயன்தாரா தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திரிஷா இதுகுறித்து பேசுகையில் ‘அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கும் என்றும், அது அத்துடன் முடிந்துவிட்டது, ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொல்வதே தெளிவான ஒரு விஷயம் தானே.
நயன்தாராவிற்கும் எனக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டியாக பார்த்தால் அது நல்ல விஷயம் ஆனால், ஒருவரை ஆதரிப்பதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்துவது தான் கேவலம் எனவும், அது நானாக இருந்தாலும் சரி மற்ற ஒரு நடிகையாக இருந்தாலும் சரி. மேலும், நயன்தாரா உட்பட சினிமாவில் இருக்கும் எந்த ஒரு நடிகையுடனும் எனக்கு பெரிதாக நட்பு இருந்தது இல்லை என்றும், ஒருவரிடத்தில் நட்பு இருந்தால் தான் பிரச்சனை ஏற்படுவதற்கு பேசாமல் போனால் வருத்தப்பட வேண்டும் எனவும், ஆனால், எனக்கு எந்த நடிகை உடனும் அப்படி ஒரு நட்பு இருந்தது கிடையாது’ என்று கூறி இருக்கிறார்.
திரிஷாவிற்கும் நயன்தாராவிற்கு ஏற்கனவே பிரச்சனை இருந்தது உண்மை தான். நயன்தாரா பில்லா பட சமயத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் சக நடிகைகளுடன் இருக்கும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது. அப்போது திரிஷா உடனான பிரச்சனை குறித்து பேசிய நயன்தாரா ”எனக்கு நண்பரா இருந்தால் நானே போய் பேசுவேன். எனக்கும் திரிஷாவிற்கும் பிரச்சனை இருக்கிறது என்று பேப்பரில் எல்லாம் எழுதினார்கள்.
ஆனால், அந்த அளவிற்கு எல்லாம் பிரச்சனை கிடையாது என்றும், ஆனால், ரெண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காது எனவும், அவங்களுக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காது அவ்ளோ தான்’ என்று நயன்தாரா பேசி இருந்தார். இதை வைத்து பார்க்கும் போது திரிஷா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காமல் போன காரணம் நயன்தாரவுடனான பிரச்சனையாக இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரு முறை நயன்தாராவிடம் திரிஷா உங்கள் தோழியா என்று கேட்ட போது, உடனே தோழி என்ற வார்த்தைக்கு எல்லாம் அவர் தகுதி இல்லை என்பது போல் பேசியிருந்தார்.