நெட்பிலிக்ஸை விரட்டியடிக்காம தூங்கமாட்டாங்க போலயே- நயன்தாராவால் மீண்டும் வந்த வினை? 

Author: Prasad
23 April 2025, 3:24 pm

நயன்தாராவால் வந்த வினை

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை  நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. அதனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது நெட்பிலிக்ஸ். “Nayanthara: Beyond the fairy tale” என்று பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண வீடியோவிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இது நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. 

nayanthara test movie not even recover 5 crores

மீண்டும் வந்த வினை?

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் “டெஸ்ட்”. இத்திரைப்படத்தை சசிகாந்த் தயாரித்து இயக்கியிருந்தார். இதில் நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒரு ஸ்போர்ட்ஸ் திரில்லராக உருவாகியிருந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்றது. 

nayanthara test movie not even recover 5 crores

இத்திரைப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு வாங்கியது. ஆனால் இத்திரைப்படத்திற்கு மிகவும் சுமாரான வரவேற்பே கிடைத்த நிலையில் தற்போது வரை இத்திரைப்படத்தால் ரூ.5 கோடி கூட வருமானம் வரவில்லையாம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.   

  • siruthai siva shift his office from anna nagar வீட்டை காலி செய்யும் சிறுத்தை சிவா? கங்குவா படத்தால இப்படி ஒரு நிலைமையா வரணும்?
  • Leave a Reply