நயன்தாரா யாருடைய மனைவி…வெளிவந்தது ‘டெஸ்ட்’ பட வீடியோ.!

Author: Selvan
15 March 2025, 4:54 pm

மாதவனின் மனைவியாக நடிக்கும் நயன்தாரா

ஓய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் குவாட்டர் கட்டிங்,இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் சசிகாந்த்,இவர்,தற்போது ‘டெஸ்ட்’ எனும் புதிய திரைப்படத்தை தயாரித்து,இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்க: விஜய் என்கிட்ட ஒன்னு கேட்டார்..பல நாள் ரகசியத்தை உடைத்த ரம்பா.!

இந்த திரைப்படத்தில் மாதவன்,சித்தார்த்,நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சிறப்பு தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்,நகுல், ஜார்ஜ் மேரியன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

படத்தின் கதையை பொறுத்தவரை,கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு திரில்லர் படமாக உள்ளது,இதில்,நடிகர் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடிக்க,நடிகை நயன்தாரா மாதவனின் மனைவியாக ‘குமுதா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் திரையரங்குகளில் திரையிடப்படாமல்,நேரடியாக ஓடிடி தளமான Netflix-இல் ஏப்ரல் 4, 2024 அன்று ரிலீஸ் ஆக உள்ளது .

அதற்கு முன்னதாக,படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ மற்றும் சில முக்கிய காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.படத்திற்கான மொத்த பின்னணி இசை மற்றும் பாடல்களை டார்பி அமைத்துள்ளார்.

Introducing Nayanthara As Kumudha | TEST | Madhavan, Siddharth, Meera Jasmine | Netflix India

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடிய திரில்லர் கதைக்களத்துடன்,‘டெஸ்ட்’ படம் ஒரு வித்தியாசமான பார்வையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • vijay road show video viral on internet ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…
  • Close menu