மீனாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. பிரபல நடிகையை மிரட்டினாரா நயன்தாரா?

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2025, 11:56 am

நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார்.

ரெஜினாவை மிரட்டி திட்டிய நயன்தாரா

தற்போது கன்னடம் – ஆங்கில மொழியில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தமிழில் அவருக்கு ஏராளமான படங்கள் கைவசம் உள்ளது.

இதையும் படியுங்க : பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை… மாஸ் கூட்டணியுடன் வெளியான அறிவிப்பு!

குறிப்பாக தற்போது இவர் நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான சர்ச்சைகளில் நயன்தாரா சிக்கி வருகிறார்.

பட பூஜையின் போது பங்கேற்ற நடிகை மீனாவை நயன்தாரா கண்டுகொள்ளாதது பெரும் சர்ச்சையாக வெடித்தது. எவ்வளவோ பேச முயன்றும் மீனாவை நிராகரித்துள்ளார் நயன்தாரா.

இதனிடையே பூஜையின் போது நடிகை ரெஜினா செல்பி புகைப்படம் எடுத்தார். அதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, டிடி என எல்லோரும் இருந்தனர். அந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த நயன்தாரா, கேரவனுக்கு போய் ரெஜினாவுக்கு போன் செய்து கண்டபடி திட்டியுள்ளார்.

Nayanthara Threatened his co Star

என் அனுமதியில்லாமல் எப்படி என்னை போட்டோ எடுக்கலாம் என கூறி விளாசியுள்ளார். அழுகாத குறையாக ரெஜினா மன்னிப்பு கேட்டுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் படத்தின் இயக்குநர் சுந்தர் சி புலம்பி தவித்து வருகிறாராம்.

Nayanthara Threaten his Co Star Regina Cassandra

என்னதான் டாப் நடிகையாக இருந்தாலும் இயக்குநர், சீனியர் நடிகர்களுக்கு மரியாதை தர வேண்டும், ஆனால் நயன்தாரா யாருக்கும் மதிப்போ மரியாதையோ தராமல் நடந்து கொள்வது அவரின் வீழ்ச்சி பாதைக்குதான் வழிவகுக்கும் என பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!