நயன்தாரா-விக்கியின் தில்லு முல்லு…25 கோடியை பறிகொடுத்த தனுஷ்..!
Author: Selvan17 November 2024, 12:34 pm
நயன்தாரா விக்கியின் திருமண ஆவணப்படம் நாளை நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.நிறைய பேருக்கு இது பற்றி தெரியாமல் இருந்த நிலையில் நேற்று வெடித்த நயன்தாரா தனுஷ் பிரச்சனையால் உலகம் முழுவதும் காட்டு தீ போல் பரவி இருக்கிறது.

நானும் ரவுடி தான் பட விடீயோவை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.அதை பார்த்த நயன்தாரா பதிலுக்கு தனுஷை திட்டி 3 பக்க அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனால் அவருடைய அந்த திருமண ஆவணப்படத்திற்கு பிரீ ப்ரமோஷன் கிடைத்துள்ளது.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்ததே இருவருக்கும் பிரச்னை ஆரம்பித்துள்ளது.படத்திற்கு தனுஷ்,நயன்-விஜய்சேதுபதி சம்பளத்தை தவிர்த்து 4 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளார்.ஆனால் படம் ஆரம்பத்திலேயே நயனுக்கும் விக்கிக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதனால் இயக்குனர் விக்னேஷ் ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் எடுப்பதாக கூறி வெவ்வேறு இடத்தில் எடுத்து தன்னுடைய காதலை வளப்பதற்காக நானும் ரவுடி தான் படத்தை பக்காவாக விக்னேஷ் பயன்படுத்தியுள்ளார்.இதற்கு நயனும் ஒத்துழைத்துள்ளார்.
இதையும் படியுங்க: கஷ்டத்தில் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி….கை கொடுக்கும் சின்னத்திரை..!
இதனால் படத்தின் பட்ஜெட் 4 கோடியை தாண்டி 25 கோடியில் வந்து நின்றது.இதனால் செம காண்டன தனுஷ் படத்தை பாதியில் கை விட்டதாக தகவல் வெளியானது.
படம் வெளியாகி ஹிட் ஆனதால் தனுஷ் பிழைத்தார்.இல்லையென்றால் தனுஷ் நிலைமை ரொம்ப மோசமா போயிருக்கும்.இதன் பின்பு இவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.