நயனின் குழந்தையா இது?.. செம்ம கியூட்… முதல் முறையாக வெளியான புகைப்படம்..! குவியும் லைக்ஸ்..!
Author: Vignesh8 March 2023, 1:30 pm
விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்யாகியுள்ளார்.
சமீபத்தில் கூட நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்யப்போவதாக வதந்தி செய்தி இரண்டாம் முறையாக பரவியதையடுத்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தன் கணவருடன் ஜோடியாக மும்பை விமானநிலையத்தில் இறங்கி ஹூட்டிங்கிற்கு சென்றார்.
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நயன் தாராவின் குழந்தை இப்படியா வளர்ந்துட்டாங்க என்று குழப்பத்தில் ஷாக்காகி வருகிறார்கள்.
Nayan – Vikki Family! pic.twitter.com/TtRLMoqNnE
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 8, 2023