நயன்தாராவின் ஆவணப்படம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.
இவர் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்து கொண்டார்.இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரண்டு ரெட்டை கதிர்கள் உள்ளனர்.
தற்போது நயன்தாராவின் “பியாண்ட் தி ஃபேர் டேல்” ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸில் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.
காதலில் விழுந்தது எப்படி
இந்நிலையில் அதில் தன்னுடைய காதல் அனுபவம் குறித்து பகிர்ந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.அதில் அவர் பாண்டிச்சேரியில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த போது என்னுடைய காட்சிக்காக நான் காத்திருந்தேன்.
அப்போது விஜய் சேதுபதி சாருக்கு ஒரு காட்சியை விக்கி விளக்கி பேசிக் கொண்டிருப்பார்.அப்போது எந்த காரணமும் இல்லாமல் விக்கியை வித்தியாசமாக பார்த்தேன். அப்போது அவரிடம் ஒரு அழகை கண்டேன்.அதில் நான் மயங்கினேன்.அவர் விஷயங்களை விளக்கும் விதம், இயக்குனராக செயல்படும் விதம் அவர் மீது ஈர்ப்பை எனக்குள் வரவழைத்தது என்று கூறியிருப்பார்.
இந்த தகவலால் நயன்தாரா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
0
0