இதை கவனிச்சீங்களா.. கடைசியில இதுவும் நயன்தாரா பிளானா?.. அந்த தேதிக்காக அப்படி செய்யப்பட்டதா?..
Author: Vignesh20 February 2023, 1:00 pm
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதனையடுத்து, தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
நயன்தாராவும் நானும் அம்மா , அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார். விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனை பார்த்தவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா என கேட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியை விளாசினர். இதனிடையே, அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.
நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாள், அதன் கூட்டு எண் 9. இதேபோல் செப்டம்பர் 18 விக்னேஷ் சிவனின் பிறந்தநாள், அதன் கூட்டு எண்ணும் 9. குழந்தைகளின் பிறந்த தேதி 9ஆக உள்ளது.
அப்பா அம்மாவின் பிறந்தநாள் 9 ஆம் எண்ணில் வருவதை போல் பிள்ளைகளின் பிறந்தநாளும் 9 ஆம் எண்ணிலேயே வந்துள்ளதால், இதனை கவனித்தவர்கள் குறிப்பிட்ட தேதியில் திட்டமிட்டு பெற்றுள்ளார்களா ? குறிப்பிட்ட தேதியில் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் , காதல், திருமணம், கோவில்களில் வழிபாடு, தற்போது குழந்தைகள் என என்ன செய்தாலும் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.