கடற்கரையில் விக்கி-நயனின் PRE-WEDDING போட்டோசூட்… ப்பா.. நல்லா புடிக்கறீங்க விக்கி..…!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 1:31 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது Connecting, AK 62, JAVAAN இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார்.

அந்த படம் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

தற்போது காதலர் சிவன் கணவர் விக்னேஷ் சிவன் ஆக மாறிய நிலையில், இவர்கள் இருவரும் தாய்லாந்து ஹனிமூன் சென்று வந்தனர். பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விக்கி – நயன்தாராவின் திருமணத்தை முழுவதும் வீடியோ எடுத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், திருமணத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட PRE-WEDDING போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

கடற்கரையில் இருவரும் மிக நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!