எல்லாத்துக்கும் இதுதான் காரணம்.. குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்கி – நயன்..!

Author: Vignesh
5 April 2023, 4:30 pm

விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

nayanthara-connect-interview-updatenews360

பின்னர் நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்யாகியுள்ளார்.

இரட்டை குழந்தைகள் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, திடீரென ஏகே 62ல் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டார். இதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டது.

Hottest Mum Nayanthara - Updatnews360

இதனிடையே, நயன்தாரா பிரபல தயாரிப்பாளரின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதாக கமிட்டாகி இருந்தநிலையில், ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டு அதற்கான முன் தொகையும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

ஆனால், அந்த இரண்டு படத்திற்கும் நயன்தாராவால் தற்போது கால்ஷீட் கொடுக்கமுடியாமல் தள்ளிப்போன நிலையில், நயன்தாராவை இப்படத்திலிருந்து விலக்கிவிட்டு, தான் கொடுத்த முன் தொகையையும் அந்த தயாரிப்பாளர் திரும்ப பெற்றுக்கொண்டு உள்ளாராம்.

nayanthara- updatenews360.jpg 2

இந்த 2 படங்கள் கைநழுவிப்போனதினால் ரூ. 20 கோடி சம்பளத்தை நயன்தாரா இழந்துள்ளார்.

அந்தவகையில் இன்று பங்குனி உத்திரம் என்பதால் தொழில் மற்றும் குடும்ப ரீதியான சறுக்கல்களை போக்க குல தெய்வ வழிபாடு செய்து பரிகாரம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பூஜைக்கு தங்களின் இரட்டை குழந்தைகள் விக்கேஷ் சிவன் – நயன் தாராவுடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 571

    1

    2