சொந்த மண்ணாச்சே.. வயநாட்டுக்கு நிதியுதவி வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி..!
Author: Vignesh2 August 2024, 5:45 pm
வயநாடு நிலச்சரிவு சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. அதிகபட்சமாக 316 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட நிலச்சரிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
பல கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். சினிமா பிரபலங்களும் தங்களால் இயன்ற நிதி உதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நிதி உதவி வழங்கியுள்ளனர். அது தொடர்பான அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
அதில், கேரளாவில் உள்ள வயநாட்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு மிகவும் வருத்தமாக உள்ளது. மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்யும் அனைவருக்கும் தலைவணங்குகிறோம். இந்த மோசமான சூழலில் எங்களால் முடிந்த இந்த உதவி செய்கிறோம் என பதிவிட்டுள்ளனர். அதில், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அவர்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.