ட்ரோல் மெட்டீரியலாக மாறிய மகன்கள்.. கோபத்தில் குழந்தைகளின் முகத்தை காட்டி கெத்தாக வீடியோ வெளியிட்ட நயன்..!

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

தனது மகன்களுக்கு அன்னப்பிராசனம் விழா நடத்தி அழகு பார்த்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மகன்களா இது? சீக்கிரத்தில் இப்படி வளர்ந்திட்டாங்களே என வியந்து கூறி வந்தனர்.

இதனிடையே, நயன்தாராவின் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். குழந்தைகளுக்கு என வேகமாக வளரும் மருந்து கொடுத்துள்ளீர்களா? என கமெண்டுகளை குவித்த வண்ணம் இருந்தது. பெரும்பாலான கமெண்டுகள் குழந்தைகள் 11 மாத காலத்தில் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்ந்து உள்ளனர் என்பதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இதனால் கோபம் அடைந்த நயன்தாரா தனது இரு ஆண் குழந்தைகளுடன் கெத்தாக வீடியோவை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

டிரம்ப் கணக்கு தவிடுபொடி.. பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு : பல லட்சம் கோடி இழப்பு!

பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…

43 minutes ago

முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?

முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…

48 minutes ago

உதயநிதியும், ஆ ராசாவும் விரைவல் கம்பி எண்ணுவார்கள் : இது ஹெச் ராஜா கணக்கு!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…

59 minutes ago

கோரிக்கை வைத்த தமிழக மக்கள்.. நிறைவேற்றி அசத்திய ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…

16 hours ago

இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…

நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…

17 hours ago

நான் இருக்கேன், Don’t worry- லைகாவுக்கு மீண்டும் கைக்கொடுக்கும் ரஜினிகாந்த்?

நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…

17 hours ago

This website uses cookies.