நயனோட பசங்களுக்கு நாங்க செலவு பண்ணனுமா?.. டென்ஷன் ஆன பிரபலம்..!

Author: Vignesh
31 July 2024, 5:14 pm

நயன்தாரா தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியா அளவில் பிரபலமாகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ஜவான் படம். இந்த நிலையில், நயன்தாரா குறித்து ஷாக் கொடுக்கும் வகையில் பத்திரிகையாளர் அந்தணன் மற்றும் பிஸ்மி கூறி இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, முன்னணி நடிகையான நயன்தாரா படப்பிடிப்பில் தனக்கான வேலை செய்ய வரும் துணை ஆட்களுக்கு சம்பளம் தர மாட்டாராம். அவர் எந்த படத்தில் கமிட் ஆகிறாரோ அப்படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்களுக்கு சம்பளம் தருவார்களாம்.

nayanthara

அதேபோல், தனது குழந்தைகளுடன் தான் நயன்தாரா வருகிறாராம். அப்போது, நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் தருவார்களாம். இந்த தகவல் பலருடைய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இது என்னடா தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனை என பல தயாரிப்பாளரும் கடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!