நயன்தாராவின் “ஜவான்” லுக் இணையத்தில் லீக்… எப்படி இருக்காருன்னு பாருங்க!
Author: Shree8 July 2023, 6:39 am
தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார்.

இப்படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் இப்படத்தில் நயன்தாராவின் கெட்டப் லுக் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதில் அவர் பிங்க் நிறத்தில் கோட் சூட் அணிந்து ஏதோ ஒரு மீட்டிங்கில் இருப்பது போன்று உள்ளது. ஆனால், அது நயன்தாராவின் லுக்கே இல்லையாம் ஏ ஐ நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட இந்த புகைப்படத்தை ஜவான் லுக் என கூறி வைரலாக்கியுள்ளனர்.