மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார்.
இந்நிலையில் femi9 என்ற நேப்கின் கம்பெனி ஒன்றை சொந்தமாக துவங்கி நடத்தி வருகிறார். அதற்கான விழா ஒன்றை ஏற்பாடு செய்த நயன்தாரா அதில் தனது கணவருடன் பலந்துக்கொண்டார். அப்போது அவர் பேச மேடைக்கு வந்தவுடன் ஐயா படத்தின் ” ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்” பாடல் ஒலிக்க அவர் வெட்க சிரிப்புடன் பேச துவங்கினார். அதன் பின்னர் ரசிகர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.