தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். சிம்பு மற்றும் பிரபு தேவாவை காதலித்து பெரும் சர்ச்சையில் சிக்கி பின்னர் அதிலிருந்து வெளியே வந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் மார்க்கெட் இழந்துள்ள நயன்தாரா தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார். இதனிடையே நயன்தாராவின் மார்க்கெட்டை வளைத்து பிடித்துவிட்டார் திரிஷா. இதனால் மீண்டும் ஒரு மெகா ஹிட் கொடுத்து மார்க்கெட் பிடிக்கவேண்டும் என முயற்சித்து அட்லீயின் ஜாவான் திரைப்படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக செம மாஸாக நடித்து மிரட்டி வருகிறாராம். இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதில் நயன்தாரா செம ஸ்டைலாக, மாஸாக attitude காட்டி நடித்திருக்கிறர். எனவே இந்த படம் திரிஷாவின் மார்க்கெட்டை தூக்கி வாரி சாப்பிட்டுவிடுமென கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 பட பெயரை சொல்லி மோசடி நடிகை ஷைனி சாரா,ரஜினிகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறி…
She can eat Rashmika for breakfast, Mrunal for Lunch.. #KayaduLohar - what a find! 💎💠…
மணிகண்டனுக்கு அடித்த ஜாக்பாட் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த போது செய்தியாளரிடம் பேசுகையில்,…
இந்த காலத்தில் சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையிலும் பெண்கள் கோலோச்ச அட்ஜெஸ்ட்மெண்ட் பெரிய தடையாகவே உள்ளது. இது குறித்து ஏராளமான…
தவெக அடுத்தகட்ட மாவட்டச் செயலாளர்கள் இன்று நியமனம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், அதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. சென்னை:…
This website uses cookies.