ஸ்டேட்டஸ் அரிப்புக்காக ரூ.100 கோடியில் வீடு.. நயன்தாராவின் பணத் திமிர் : பிரபலம் கொந்தளிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan21 March 2025, 2:01 pm
நயன்தாரா ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியது குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா கடுமையா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாக உள்ள நிலையில், தற்போது ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க : ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. அடடே சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ணிட்டாரே!
சில நடிகைகள் கொடி கட்டி பறந்தாலும் கடைசியில் எதுவும் சேர்த்து வைக்காமல், ஒண்ணும் இல்லாமலே இறந்துவிடுகின்றனர். உதாரணத்துக்கு ஜெயலலிதாவை கூட சொல்லலாம். அவ்வளவு சொத்து வைத்தது அவருக்கு 6 அடி தான மிஞ்சியது.

ஆனால் நயன்தாரா, தனுஷ் போயஸ் கார்டனில் ரூ.150 கோடிக்கு பிரம்மாண்ட வீடு கட்டியதற்காகவே இவரும் போட்டிக்கு கட்டியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், நயன்தாரா தனது வீட்டை பட சூட்டிங்கிற்காக வாடகைக்கு விட்டுள்ளார். தனுஷ் உடன் மோதல் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

நானும் ரவுடி தான் பட பிரச்சனையால் தனக்கு திருமண ஆவணப்படத்தில் காட்சிகளை கொடுக்க அனுமதி தராததால் ஏற்பட்ட சங்கடமே நயன் தனது சொத்துக்களை உயர்த்த பல திட்டங்களை தீட்டியுள்ளதாகவும், ஆனால் இது அவருக்கு தேவையில்லாத வேலை என சேகுவேரா விமர்சித்துள்ளார்.
பண திமிரை காட்டவே நயன்தாரா ரூ.100 கோடி மதிப்பில் வீடு கட்டியதாகவும், ஸ்டேட்டஸ் அரிப்புக்காகவே தனுஷை விட பிரம்மாண்ட பங்களா கட்டியுள்ளதாகவும் வாழ ஒரு வீடு போதாதா என சேகுவேரா கடும் கோபத்தோடு கூறினார்.