நயன்தாராவை தாய்மையோடு ஒப்பிடாதிங்க… பணம் இருந்தா 1000 வாங்கலாம் தாய் பாசம் வாங்க முடியாது!

Author: Shree
19 May 2023, 3:31 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்ச அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர். அண்மையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா குழந்தை பிறந்த உடனே கையில் ஏந்திய புகைப்படங்களை வெளியிட்டு ” உலகின் சிறந்த தாய்க்கு முதல் அன்னையர் தினத்தை வாழ்த்துங்கள்” என கூறி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு பேட்டி ஒன்றில் நயன்தாரா வாடகை தாய் பெற்றுக்கொண்டது நியாமா? என்ற கேள்விக்கு. அவங்க வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது. அது அவர்கள் விருப்பம். ஆனால், அதை ஊர் முழுக்க அம்பலப்படுத்த நினைந்து அவங்களே திட்டமிட்டு பரபரப்பை கிளப்பியது தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

என்ன தான் இருந்தாலும் அந்த குழந்தைகள் ஷூட்டிங் சென்று வந்தாலும் அவங்க தான் தாலாட்டி , தூங்கவைத்து, பராமரிக்கணும் இருந்தாலும் அதை தாய்மையோடு ஒப்பிடுவது சரியா படல… 10 மாதங்கள் சுமந்து பிறப்பது வேறு தான் என கூறினார். இதற்கு நெட்டிசன்ஸ் ஒருவர், நயன்தாரா முழுமையான தாய் பாசம் அறியாத பேதை… பணம் இருந்தா 1000 வாங்கலாம் தாயின் பாசம் வாங்க முடியாது. அந்த இரண்டு குழந்தைகளை பெற்ற தாய்க்கே முழுமையான பாசம் இருக்கும்.

https://www.facebook.com/watch/?v=2390903807758427&ref=sharing

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்