ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்ட நஸ்ரியா? கியூட் போட்டோ வெளியிட்டு ஷாக்!
Author: Rajesh1 February 2024, 3:15 pm
மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

துளியும் கவர்ச்சி காட்டாமல் இருக்கும் இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது நஸ்ரியா குழந்தையுடன் எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு ” ஹேப்பி பர்த்டே பேபி… நச்சு மாமி உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என கேப்ஷன் போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் பார்க்க உங்கள மாதிரியே இருக்கு இந்த பாப்பா…. ரகசியமா குழந்தை பெத்துக்கிட்டீங்களா? என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.