டிய்யா டிய்யா டிய்யா அட டண்டனக்கா டிய்யா…. குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட நஸ்ரியா ( வீடியோ )

Author: Rajesh
23 December 2023, 5:23 pm

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

nazriya nazim - updatenews360

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

துளியும் கவர்ச்சி காட்டாமல் இருக்கும் இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது கணவர் பகத் ஃபாசில் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நஸ்ரியா குழந்தையுடன் கியூட்டாக குத்தாட்டம் போட்ட வீடியோ ஒண்டு சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த லேட்டஸ்ட் வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/shorts/MX5t0_tDGVk
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!