சினிமா / TV

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை

நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர் பிரபலமடைந்திருந்தாலும் “ராஜா ராணி” திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது. அதே சமயம் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவரது  கியூட்டான நடிப்பு பலரையும் கவர்ந்திழுத்தது.  

இவர் 2014 ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். எனினும் 2018 ஆம் ஆண்டு “கூடே” என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. 

காணாமல் போன நஸ்ரியா

நஸ்ரியா எப்போதும் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம் வருவார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் எந்த சமூக ஊடக கணக்குகளிலும் ஆக்டிவாக இல்லை. இந்த நிலையில் நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்தான ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். 

அதில், “எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் இவ்வளவு நாள் சமூக ஊடகங்களில் தென்படாதது குறித்து பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நான் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவே இருந்து வந்துள்ளேன். எனினும் கடந்த சில மாதங்களாக கடினமாக இருக்கும் எனது தனிப்பட்ட சவால்களுடன் போராடி வருகிறேன். 

எனது 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் நான் தவறவிட்டுவிட்டேன். அதே போல் நான் நடித்த ஷூக்சமதர்ஷினி திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடவும் தவறிவிட்டேன். நான் உங்களிடம் சொல்லாமல் காணாமல் போனது குறித்து உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஃபோன் கால்களுக்கு பதில் அளிக்காமலும் உங்களது குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்காமலும் இருந்ததற்கு எனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என்னை தொடர்புகொள்ள முயன்ற சக நடிகர்களுக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு கடினமான பயணம்தான், ஆனால் நாட்கள் ஆக ஆக நான் குணமாகி வருகிறேன் என்பதை மட்டும் உங்களிடம் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். புரிதலுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றாலும் பலரும் நஸ்ரியா மீண்டு வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 minutes ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

47 minutes ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 hour ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 hour ago

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி மாணவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!

சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…

2 hours ago

This website uses cookies.