அரிய வகை நோய்.. வீட்ல பகத் பாசில் பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு.. நஸ்ரியா ஷாக்கிங் தகவல்..!

Author: Vignesh
7 June 2024, 8:00 am
nazriya
Quick Share

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பஹத் பாசில் ஒரு முறை பாத்ரூமில் இருந்து பாயங்கரமாக கத்தியுள்ளார் . இதை கேட்டு அலறிடுது ஓடிய நஸ்ரியா உங்களுக்கு என்ன ஆச்சு என பதறிப்போய் கேட்டாராம். பின்னர் பெட் ரூமில் வந்தும் அப்படியே கத்தியிருக்கிறார். பின்னர் அமைதி படுத்தி என்ன என கேட்டபோது தான், ” நான் நடிக்கும் படத்தின் கேரக்டர் தான் இது” அதை நான் உளவாங்கி நடித்தால் அதில் இருந்து வெளியில் வரமுடியவில்லை என சொன்னாராம். பாத்ரூமில் சத்தம் போட்டு கத்துவார், சிரிப்பார். இப்போது எல்லாமே பழகிவிட்டது என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

fahadh-faasil-updatenews360

மேலும் படிக்க: விலை உயர்ந்த செருப்பு வாங்க ஆசைப்பட்ட அனிகா : அதுக்குனு இப்படியா இறங்குவீங்க? ரசிகர்கள் விமர்சனம்!

முன்னதாக, தற்போது 41 வயதாகும் பஹத் பாசில் தனக்கு ஒரு நோய் வந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ADHD என கூறப்படும் Attention-deficit/hyperactivity disorder என்ற நோய் அவருக்கு வந்திருக்கிறதாம். பொதுவாக குழந்தைகளுக்கு தான் இந்த நோய் வரும். ஆனால், பெரியவர்களுக்கு வந்தால் அதை சரி செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 118

0

0