விஜய் டிவி சீரியல் நடிகருக்கு சிறப்பாக முடிந்த திருமணம்.. வெளியான கலக்கல் போட்டோஸ்..!
Author: Vignesh25 January 2024, 4:48 pm
வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி. சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் நீ நான் காதல் இதுவரை பல எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. ஆனாலும், சீரியலில் நிறைய புது முகங்கள் இருப்பதால் இன்னும் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. காதல் கதையை மயமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் Iss Pyaar ko Kya Naam Doon என்ற ஹிந்தி தொடரின் ரீமேக் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நீ நான் காதல் தொடரின் நாயகனாக நடித்து வருவார் பிரேம் ஜேகப். இவருக்கு ஸ்வஸ்திகா என்பவருடன் அண்மையில் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.