பிரபல தனியார் தொலைக்காட்சிகளான விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் கடந்த சில நாட்களாகவே TRP யில் போட்டிப்போட்டுக்கொண்டு யார் பெருசு என முந்தியடித்தனர். அதில் வழக்கம் போலவே விஜய் டிவியை யாராலும் அசைக்க முடியவில்லை.
அப்படித்தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக கரு. பழனியப்பன் ஜீ தமிழில் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சி மக்களால் பார்க்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் அவரது கருத்துக்களை மக்கள் விரும்பினாலும் காலப்போக்கில் அது கசப்பாகி அந்த மனுஷன் மீது வெறுப்பையும், கிண்டலையும் கக்கி வந்தனர்.
ஆம், கோபிநாத்துடன் இணைத்து கருபழனிப்பனின் பேச்சை கிண்டலடித்தனர் நெட்டிசன்ஸ். உதாரணம், ” சில நாட்களுக்கு முன்னர் நீயா நானா நிகழ்ச்சியில் சம்பாதிக்கும் மனைவிகள் மற்றும் அவரது கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில் கோபிநாத், படிக்க தெரியாத அப்பா ஒருவர் தன மகள் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை மேடையில் வெளிப்படுத்தினார். அதிலும் ‘ஆனந்தமாக வாழ அறிவாக இருக்க அவசியம் இல்லை’ என்ற வசனத்திற்கு கைதட்டல் அரங்கமே அதிர்ந்தது.
இதெல்லாம் பார்த்து கரு. பழனிப்பன் வேஸ்ட் என்றும் அரசியல் கருத்தை முன்வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார் என ட்ரோல் செய்தனர். மேலும் அவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அரசியல் பேசி வருவதாகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். அதற்கு முடிவு கட்டிய கரு. பழனியப்பன் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறிவிட்டார். சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! என தனது பதிவிலும் அரசியலை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியின் சாயலிலே நீங்க ஏன் பேசுறீங்க என கேட்டதற்கு, அதற்கு அவர், இங்கு எதுவுமே புதுசா இல்லை. எனக்கா முதல் முதலில் மீசை வந்தது. நானா? முதன் முதலில் மீசையை முறுக்கி காட்டினேன். யாரோ ஒருத்தர் செய்ததை பார்த்து தான் நான் செய்கிறேன். அது தான் சமூகத்தில் காலம் காலமாக நடந்துவருகிறது என மழுப்பலாக பதில் கூறி அடாவடித்தனமாக தன்னை நியாயப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து நெட்டிசன்ஸ் அவரை மோசமாக விமர்சித்துள்ளனர்.
அதற்கு ஒரு நெட்டிசன், கேள்வி தப்பு… நீயா நானா நல்லா இருக்கு உன்னோட show ஏன் மகா மட்டமா இருக்குன்னு கேட்டு இருக்கனும் என விமர்சித்துள்ளார். மற்றொருவர், நீயா நானாவில் மரியாதை கொடுப்பார்கள். தமிழா தமிழாவில் இருக்கிற மரியாதையை கெடுப்பார்கள் என நிதர்சனமான உண்மையை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ:
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.