மனைவி அமைவது” மட்டுமல்ல “கணவன் அமைவதும்” இறைவன் கொடுத்த வரம் தான் – நீயா நானாவில் நெகிழ வைத்த தம்பதிகள்!
Author: Shree24 August 2023, 5:53 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகும் ஒரு விவாத பேச்சு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிப்பார்கள். இந்நிகழ்ச்சியை மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டுச்செல்வார் தொகுப்பாளர் கோபிநாத்.
வீடு, அலுவலகம், நாடு , கணவன் மனைவி, மாமியார் மருமகள், பெற்றோர்கள் பிள்ளைகள், சினிமா , சினிமா கலைஞர்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது மனைவிமார்கள் மற்றும், கணவன் மார்களை வைத்து அவரவர் பொறுப்புகளையும், கஷ்டங்களை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டது.
அதில் ஒரு தம்பதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்கள். மனைவியின் பிரசவ வலியை பார்த்து மிகுந்த வேதனைக்குள்ளான அவரின் கணவர் பிறந்த குழந்தையை எப்போதும் கணவரே மிகுந்த பொறுப்புடன் பார்த்துக்கொள்வாராம். இரவில் குழந்தை அழுதாள் கூட மனைவியை தொந்தரவு செய்யாமல் அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு தன் தோல் மீது சாய்த்துக்கொண்டு இரவு முழுக்க கூட பார்த்துக்கொள்வாராம்.
இப்படி மனைவிக்கு கஷ்டமாக இருக்கும் என கணவரும், கணவருக்கு கஷ்டமாக இருக்கும் என மனைவியும் மாறி மாறி அன்பு செலுத்திக்கொள்ளும் அந்த தம்பதிகளை பார்த்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் மட்டும் அல்லாமல் மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்து விட்டார்கள். இதோ அந்த வைரல் வீடியோ!