ஒரு படம் தோல்வி அடைந்தால் அவரை அப்படி மதிப்பிடக்கூடாது. – பரிந்து பேசிய ரஜினி – வெறித்தனமா உருவாகும் ஜெயிலர்!
Author: Shree8 ஏப்ரல் 2023, 1:39 மணி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்த எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி மிக முக்கியமான படமாகும். இருவருக்கும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பியிருக்கின்றனர்.
ஆம் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் அவர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அப்படம் படுதோல்வி அடைந்ததது. இதனால் அவர் அடுத்தடுத்து கமிட்டாகி இருந்து திரைப்படங்களில் இருந்து நைசாக நீக்கிவிட படக்குழு திட்டமிட்டனர்.
அப்படித்தான் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு வேறு ஒரு இயக்குனரை மாற்றலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியிடம் கூறியுள்ளது. அதற்கு ரஜினி, ப்ளீஸ் வேண்டாம்…. ஒரு படம் தோல்வி அடைந்தால் அவரை அப்படி மதிப்பிடக்கூடாது. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவோம் என நெல்சனுக்காக பரிந்து பேசினாராம்.
தலைவர் தனக்காக இப்படி பேசி வாய்ப்பு வாங்கி கொடுத்திருப்பதை அறிந்த நெல்சன் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்பதில் கடுமையாக முயற்சித்து வருகிறாராம். எப்போதும் வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் நெல்சன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் தூங்குகிறாரம். ரஜினி உங்க மேல வச்ச நம்பிக்கை வீண் போகாது நம்பிக்கையோடு பணியாற்றுங்கள் நெல்சன்….!
5
1