என்ன தான் இருந்தாலும் விஜய் விஜய் தான்… ரஜினியிடம் கூட தளபதியை விட்டுக்கொடுக்காத நெல்சன்!

Author: Shree
16 August 2023, 11:27 am

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரஜினிக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இப்படியிருக்கையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காக்கா, கழுகு ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு கதை சொன்னார். அதில் அவர் காக்கா என கூறியது நடிகர் விஜய்யை தான் தகவல்கள் பரப்பப்பட்டு, சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இதனால், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கிடையே சோசியல் மீடியாவில் வார்த்தை மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. இதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆனால், விஜய் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை மோசமாக தரைகுறைவாக விமர்சித்து வெறுப்பை கக்கினர். தற்போது அஜித் vs விஜய் மாறி ரஜினி Vs விஜய் என நிலைமை ஆகிவிட்டது.

இவர்கள் இருவரின் ரசிகர்கள் என்ன தான் அடித்துக்கொண்டாலும் ரஜினி விஜய் ரெண்டு பேரும் பழையமாதிரி நன்றாகவே பழகி வருகிறார்கள். ஆம், விஜய் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கு போன் போட்டு , படம் சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என கூறி வாழ்த்தினராம். ஜெயிலர் வெற்றிக்கு முழு முழுக்க விஜய் தான் காரணமாம். ஆம், நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் ரஜினிக்கு கதை சொல்ல நெல்சனை ஊக்குவித்து அனுப்பினராம் விஜய். எனவே அவர்கள் இருவரும் எந்த போட்டி பொறாமையும் இல்லாமல் தான் இருக்கிறார்கள் இதற்கிடையில் ரசிகர்கள் தான் வீண் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

‘பீஸ்ட்’ விமர்சனங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யிடம் ‘சார் என் மேல உங்களுக்கு எதும் கோபமா?’ என நெல்சன் கேட்டேன். அதற்கு அவர், “படம் எடுத்தோம். சிலருக்கு பிடித்திருக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை. அவ்ளோதான். அடுத்த முறை வேறுமாதிரி படம் பண்ணலாம். நான் எதுக்கு உன் மீது கோபமாக இருக்கப் போகிறேன்?. உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா? நீ இப்படி என்னிடம் கேட்பது கஷ்டமாக உள்ளது என விஜய் கூறினாராம். ஜெயிலர் வந்ததும் முதலில் அவர் தான் என்னைப் பாராட்டினார். வாழ்த்து தெரிவித்தார்” என நெல்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

என்ன தான் இருவரது ரசிகர்கள் பிரிவினை உண்டாக்கி வெறுப்பை வெளிப்படுத்தினாலும் நெல்சன் விஜய் மீது எப்போதும் மரியாதை அன்பை வைத்துள்ளார் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுத்தாலும் நெல்சன் எந்த ஒரு இடத்திலும் விஜய்யை விட்டுக்கொடுக்காமல் பேசுவது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள புரிதலையும் உறவையும் வெளிப்படுத்துகிறது என அவர் கூறினார். நெல்சன் ரஜினியிடம் கூட விஜய்யை விட்டுக்கொடுக்கமால் இருப்பது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மரியாதை வெளிப்படுத்துகிறது.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?