நின்று போன ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு..? இயக்குநர் நெல்சன் திலீப் குமாரால் அப்செட்டில் ஃபேன்ஸ்..!
Author: Vignesh3 December 2022, 9:45 am
‘ஜெயிலர்’ படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், தற்போது எங்கு சென்றிருக்கிறார் என்பதை புகைப்படம் போட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
‘பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
கிட்ட தட்ட 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த பட்ட படப்பிடிப்பில் தமன்னா, ரம்யா கிருஷ்ணா போன்றவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், கிடைத்த கேப்பில்… நெல்சன் திலீப் குமார் எங்கு சென்றுள்ளார் என்று கூறினால் ஆச்சரியப்படுவீர்கள், ஆம் கத்தார் நாட்டிற்கு தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க பறந்து சென்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் என்ன சார் தலைவர் படப்பிடிப்பை விட்டுவிட்ட ஜாலியாக வெளிநாடு சென்றுள்ளீர்களே என காமெடியாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.