தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோக்கள் வச்சி படம் எடுத்தாலும் அது தோல்வி அடைந்துவிட்டால் யாரும் இயக்குனரை பெரிதாக மதிக்கமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு நடந்தது. இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆன நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் பார்வை அவர் மீது விழுந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் கொடுத்தார்.
அதன் பின்னர் விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் வழங்கிய விருது விழாவிற்கு சென்ற நெல்சன் மரியாதையோடு வரவேற்பு கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டார்.
அதே நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் போது பவுன்சர்கள் சூழ அணிவகுத்து வரவேற்கப்பட்டார். ஆனால் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி வரும் போது அங்கு யாரும் அவர்களை கண்டுக்கொள்ளவிலை. இதனால் மிகவும் அசிங்கப்பட்டு தலைகுனிந்தபடி சென்ற வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து “ஜெயிலர் படம் வெளியாகட்டும்” பாடம் புகட்டுவோம் என அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தனர்.
அன்றே இந்த சம்பவம் ரஜினி காதுக்கு செல்ல… ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் விசிட் அடித்து நெல்சனை அருகில் அமரவைத்து. விருது விழாவில் நடந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டேன். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நானும் இப்படி நிறைய அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன் என கூறி அவரது அனுபவங்களை எடுத்து சொல்லி நெல்சனை பூஸ்ட் செய்திருக்கிறார். பின்னர் ஒட்டுமொத்த படக்குழுவையே உற்சாகப்படுத்திவிட்டு சென்றாராம்.
இப்படி அவமானப்பட்டதால் மீண்டும் தோல்வி கொடுத்து சூப்பர் ஸ்டார் என் மீது வைத்த நம்பிக்கையை வீணடித்துவிடக்கூடாது என கடுமையாக உழைத்து இன்று ஜெயிலர் வெற்றி கண்டுள்ளது. இப்படம் சிறப்பாக இருப்பதாக பெருவாரியான ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூற நெல்சன் நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா என என்ற நினைப்பில் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.