ஜெயிலர் 2 எடுப்பதில் சிக்கல்..முக்கிய நடிகர்கள் இல்லாமல் தவிக்கும் நெல்சன்..!
Author: Selvan30 November 2024, 11:45 am
ரஜினி, சிவராஜ் குமார் உடல்நிலை சிக்கல்
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிபெற்ற நிலையில்,அடுத்தாக ரஜினியை வைத்து ஜெயிலர் 2 எடுக்க இருக்கிறார்.
ஜெயிலர் முதல் பாகத்தில் சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டி இருப்பார்கள்.இவர்கள் இருக்கும் காட்சிகள் தான் பெரும்பாலும் ஜெயிலர் 2 வில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் தெலுங்கு நடிகர் சிவராஜ் குமார் சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் திடீரென அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டுவருகிறார்.
இதையும் படியுங்க: காலா படத்தால் தனுஷ்க்கு வந்த வினை… அப்போ விவாகரத்துக்கு இதுதான் காரணமா…!
கிட்டத்தட்ட 6 மாதங்கள் அவர் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.இதனால் ஜெயிலர் 2 வில் அவர் இணைவது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க,ரஜினி கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஒரு சிறிய ஆபரேஷன் செய்து அவரும் ஓய்வில் இருக்கிறார்.
இயக்குனர் லோகேஷ்,ரஜினி இல்லாத காட்சிகளை எடுத்து பேட்ச் ஒர்க் செய்து வரும் நிலையில்,நெல்சன் இயக்கம் ஜெயிலர் 2 நிலைமை மோசமாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.