அவமானப்பட்டு கலங்கிய நெல்சன்… ஓடிவந்து கண்ணீரை துடைத்த ரஜினி – நெகிழ்ச்சி சம்பவம்!

Author: Shree
5 May 2023, 7:35 pm

விருது விழாவில் அவமானப்பட்டு கலங்கி நின்ற நெல்சன் திலீப் குமாருக்கு நேரில் வந்து ஆதரவு கொடுத்த ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோக்கள் வச்சி படம் எடுத்தாலும் அது தோல்வி அடைந்துவிட்டால் யாரும் இயக்குனரை பெரிதாக மதிக்கமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு நடந்தது. இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆன நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் பார்வை அவர் மீது விழுந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் கொடுத்தார்.

அதன் பின்னர் விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் அண்மையில் தற்போது தனியார் ஊடகம் வழங்கிய விருது விழாவிற்கு சென்ற நெல்சன் மரியாதையோடு வரவேற்பு கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

அதே நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் போது பவுன்சர்கள் சூழ அணிவகுத்து வரவேற்கப்பட்டார். ஆனால் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி வரும் போது அங்கு யாரும் அவர்களை கண்டுகொள்ளவிலை. இதனால் மிகவும் அசிங்கப்பட்டு தலைகுனிந்தபடி சென்றுள்ள வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து “ஜெயிலர் படம் வெளியாகட்டும்” பாடம் புகட்டுவோம் என அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தனர்.

இந்த சம்பவம் ரஜினி காதுக்கு செல்ல… ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் விசிட் அடித்திருக்கிறார். அப்போது நெல்சனை அருகில் அமரவைத்து. விருது விழாவில் நடந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டேன். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நானும் இப்படி நிறைய அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன் என கூறி அவரது அனுபவங்களை எடுத்து சொல்லி நெல்சனை பூஸ்ட் செய்திருக்கிறார். பின்னர் ஒட்டுமொத்த படக்குழுவையே உற்சாகப்படுத்திவிட்டு சென்றதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு தெரிவித்திருக்கிறார்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 759

    8

    2