ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீஸ் விசாரணை..!

Author: Vignesh
20 August 2024, 12:44 pm

சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கக்கூடிய நெல்சன் கோலமாவு கோகிலா, டான், டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் சமீப காலமாக மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த சம்பவம் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருந்தார். இவரின் கொலை சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில், தலைமறைவாகிய ரவு டிசம்போ செந்தில் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, ரவு டிசம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாகவும், வெளிநாடு தப்பி செல்வதற்கு முன் மோனிஷா தொடர்ந்து அவரிடம் போனில் பேசியதாகவும், சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறதாம்.

மேலும், அடுத்த கட்டமாக இயக்குனர் நெல்சனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 265

    0

    0