பிரபல நடிகரான நடிகர் நெப்போலியன் 90ஸ் காலகட்டங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வந்த இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பெரும் புகழ்பெற்றார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து, சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.
சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த நடிகர் நெப்போலியன் தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடும்பத்தோடு சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு 100 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து சொந்தமாக தொழில் நடத்தியும் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதனிடையே தன்னுடைய மகன் தனுசுக்கு நடிகர் நேப்போலியன் திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்ததில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
ஆம் அவரது மகன் தனுஷ் 4 வயதாக இருக்கும் போதே “Muscular dystrophy” என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீல் சாரில் அமர்ந்தபடியே இருக்கிறார். இப்படியான மகனுக்கு நடிகர் நெப்போலியன் திருமணம் செய்து வைத்து பார்க்க ஆசைப்பட்டு திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவரை தனது மகனுக்கு நிச்சயம் செய்து வைத்திருக்கிறார்.
இதையடுத்து நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் டோக்கியோவில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது மேலும் நெப்போலியன் பிரபலங்கள் மற்றும் நண்பர்களுக்கு மகனின் திருமண அழைப்பிதையை அனுப்பி அழைப்பு விடுத்த வருகிறார்.
இந்த நிலையில் நெப்போலியன் மகனின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ராஜ பரம்பரை வீட்டு கல்யாணம் போல் ஓலைச்சுவடி போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அழகிய திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு டப் கொடுப்பார் போல நெப்போலியன் என அவரை தமிழ் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். காரணம் தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடித்து தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதை பலரும் பாராட்டி தள்ளியுள்ளனர். இதோ அந்த திருமண வீடியோ:
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.