நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் அதை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் வீல்சேரிலே அவரது வாழ்க்கை. சென்று கொண்டிருக்கிறது. இப்படியான சமயத்தில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றது.
அதாவது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தான் நெப்போலியன் மகன் தனுஷிற்கு மணமுடிக்க இருக்கிறார்கள். அவர்களது நிச்சயதார்த்தம் தமிழ்நாட்டில் நடந்ததை அடுத்து தற்போது திருமணம் ஜப்பானில் நடைபெற இருக்கிறது .
இதற்காக திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் படையெடுத்து இருக்கிறார்கள். இந்த திருமணம் சொகுசு கப்பலில் ஒரு வார காலம் அமெரிக்காவிலிருந்து பயணத்தை ஆரம்பித்து ஜப்பான் சென்றடைந்து நெப்போலியன் குடும்பம் அங்கே திருமணத்திற்கான வேலைகளை மும்முறமாக செய்தார்கள் .
15க்கும் மேற்பட்ட அறைகளை புக் செய்து இருக்கிறாராம். அந்த அறையில் சகல வசதிகளும் இருக்கிறது என கூறப்படுகிறது.
மேக்கப் போட்டுக் கொள்வதற்கு ஒரு அரை, மாஸ்டர் பெட்ரூம் என்று நல்ல வியூ பாயிண்ட் ஓட சேர்ந்த பால்கனி, மேக்கப் கிட்களை வசதியாக வைத்துக் கொள்வதற்காக ஒரு டேபிள் மற்றும் அறைக்குள் இன்னொரு அரை என பல வசதிகள் இருக்கிறது .
மேலும் ஹோட்டலுக்கு அருகிலேயே ஷாப்பிங் செய்வதற்கான வசதியான ஒரு மால் விதவிதமான உணவுகளை சாப்பிடுவதற்கு ரெஸ்டாரன்ட் என பிரம்மாண்டமாக உள்ளதாம்.
அந்த ஹோட்டலில் திருமணத்தை நேரடியாக பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். எனவே இந்த திருமணம் மிகுந்த எதிர்பார்க்கும் படி அமைந்துள்ளது.
முன்னதாக தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் சேர்ந்து ப்ரீவெட்டிங் போட்டோஸ் நடத்திய வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர்
நாளை ராதிகா, மீனா, கலா மாஸ்டர், பாண்டியராஜன்,சரத்குமார், கார்த்தி என பல நட்சத்திர பிரபலங்கள் ஜப்பானில் படையெடுத்து குவிந்து இருக்கிறார்கள் .
மேலும் இந்த பிரபலங்கள் ஜப்பான் சென்று திருமணத்தில் கலந்து கொள்ள மணமக்களை வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு வந்தவர்களை நெப்போலியன் விமான நிலையத்திற்கு சென்று மிகுந்த மரியாதையோடு வரவேற்றார் தனது மகன் திருமணத்திற்காக இவ்வளவு தூரம் பயணித்து வந்தவர்களை மனம் நோகாதபடி ஏற்பாடுகளை பார்த்து பார்த்து செய்திருக்கிறாராம் .
அதன்படி வந்தவர்கள் தாங்குவதற்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோசிட்டியில் அமைந்திருக்கும் ஹில்டன் என்ற ஹோட்டல் எடுத்து கொடுத்திருக்கிறார். அந்த அறையின் ஒரு இரவுக்கான வாடகை மட்டும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 50 ஆயிரத்துக்கு ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.