என் மருமகள் எங்க குலசாமி…. மகனுக்கு திருமணம் முடித்து கலங்கி அழுத நெப்போலியன்!

Author:
8 November 2024, 2:25 pm

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நேற்று ஜப்பானில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் முடித்த கையோடு மிகவும் எமோஷ்னலாக பேசிய விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

nepoleon

அதாவது தன்னுடைய வீட்டிற்கு விளக்கேற்ற வரும் மருமகள் தங்களுக்கு மறு மகள்தான் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய நெப்போலியன் எவ்வளவோ பெயர் புகழ் நான் சம்பாதித்தாலும் என்னுடைய மகனின் சூழலை தெரிந்து கொண்டு மகளை மணமுடித்து வைக்க சம்மதித்த அக்ஷயாவின் பெற்றோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதேபோல் தனுஷை திருமணம் செய்ய தயார் என்று கூறி அக்ஷயா மிகப்பெரிய தியாகத்தை வாழ்க்கையில் செய்திருக்கிறார். நான் அவரை வெகுவாக பாராட்டுகிறேன் இதனிடையே இவர்கள் எல்லாம் எங்களுக்கு காவல் காக்கும் சாமி போன்றவர்கள் என்றும் மிகுந்த நிகழ்ச்சியோடு கூறி கண்கலங்கி அழுதபடி பேசினார் நெப்போலியன்.

actor napoleon son

நெப்போலியன் இந்த வார்த்தைகள் ஒரு தந்தையாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியுது என ரசிகர்கள் பலரும் அவரது குடும்பம் நீடூழி வாழ தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?