கல்லா கட்டிய நெட்ஃபிளிக்ஸ்…பல மாஸ் படங்களின் OTT உரிமைகளை வாங்கி அசத்தல்…!

Author: Selvan
15 January 2025, 5:53 pm

2025-ல் NETFLIX-ல் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

தற்போது இருக்குற காலகட்டத்தில் சினிமா ரசிகர்களிடையே எந்த படம் எப்போது எந்த OTT-யில் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Ajith's Vidamuyarchi Netflix release

அந்த வகையில் தற்போது படத்தின் படக்குழுவும் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே படத்தின் உரிமையை பிரபல OTT நிறுவனங்களிடம் விற்று வசூலை முன்கூட்டியே ஆரம்பித்து விடுகிறது.

இந்த நிலையில் தற்போது பிரபல நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் அடுத்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கின்ற பல படங்களை வாங்கி அசத்தியுள்ளது.அதிலும் குறிப்பாக ரசிகர்கள் பெரிது எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி,குட் பேட் அக்லி-யை வாங்கியுள்ளது.

இதையும் படியுங்க: TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!

அதுமட்டுமல்லாமல் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரெட்ரோ படம்,துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் திரைப்படம்,துல்கர் சல்மானின் காந்தா படம்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் மற்றும் வைபவ் நடிக்கும் பெருசு என பல படங்களை தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.இதனால் சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…