பாண்டிச்சேரி என்ன பாகிஸ்தான் பார்டர்லயா இருக்கு…? சப்பைக்கட்டு கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷை வெளுத்து எடுக்கும் நெட்டிசன்ஸ்!
Author: Rajesh5 January 2024, 4:09 pm
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் பத்திரிக்கையாளர்கள் விஜயகாந்த் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வராதது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நான் பாண்டிச்சேரியில் சுழல் 2 பட ஷூட்டிங்கில் இருந்ததால் விஜய்காந்த் மறைவிற்கு என்னால் வரமுடியவில்லை என்றார்.
பின்னர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரை வைப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு, நான் இப்போது கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன். இந்த இடத்தில் மறந்த நடிகர் விஜயகாந்த் பற்றி கேட்பது நல்லதல்ல. எனவே கடைதிறப்பு விழாவை பற்றி மட்டும் கேளுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேள்விகளுக்கு முடிவுகட்டினார். அவரின் இந்த பேச்சு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதுமட்டும் அல்லாமல், இறுதி அஞ்சலிக்கு வராததற்கு ஷூட்டிங் என்று காரணத்தை காட்டி சப்பைக்கட்டு கட்டுறியேமா பாண்டிச்சேரி என்ன பாகிஸ்தான் பார்டர்லயா இருக்கு? நினைத்திருந்தால் அரைமணிநேரத்தில் வந்துபோயிருக்கலாமே என அவரை பங்கமாக கலாய்த்து விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.