இசையமைத்த படங்களை விட அனுபவித்த நடிகைகள் தான் அதிகம் – பெருமையா பேசிய பத்திரிகையாளர் – வெளுத்த நெட்டிசன்ஸ்!

Author: Shree
4 August 2023, 1:25 pm

தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர், விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.

தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், ” சமீப காலமாக அனிருத் மீது எந்த ஒரு சர்ச்சைகளும் வெளியாவதே இல்லை. குறித்த நேரத்திற்கு ஸ்டுடியோவுக்கு வருவதில்லை, குறித்த நேரத்திற்கு பாடல் கொடுப்பதில்லை, பாடகர்களை திடீரென மாற்றுவது, பாடகர்களை அவமதிப்பது, நடிகைகளுடன் தவறான பழக்கம் இப்படி எதுவுமே சமீப நாட்களாக இல்லை.

மேலும் மற்ற இசையமைப்பளார்களின் டியூன் பிடித்துவிட்டால் காசு வாங்காமல் கூட இசையமைத்து கொடுக்கிறார். அதுவே டியூன் பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு காசு கொடுத்தாலும் வேண்டாம் என கூறிவிடுகிறாராம் என செய்யாறு பாலு அனிருத் குறித்து பெருமையாக பேசியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் பலர் எதிர்மறையாக விமர்சித்து “இவன் இசை எல்லாம் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்பதே உண்மை. அனிருத் இசையமைத்த படங்களை விட அவன் அனுபவித்து நடிகைகள் தான் அதிகம்” என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து விமர்சித்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ