எல்லை மீறி போறீங்க.. வேற வேஷமே கிடைக்கலையா..? குக் வித் கோமாளி நிகழ்ச்சி ப்ரோமோவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
24 February 2023, 7:22 pm

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மிகவும் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால், 4வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஷோ நல்ல ஹிட்டாவதற்கு காரணமே கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டுமல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் பல புதிய கோமாளிகள் இடம்பெற்றுள்ளனர். 3 சீசன்களால் பிரபலமான புகழ், KPY பாலா, சிவாங்கி ஆகியோருக்கு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளால் சினிமாவில் நடிப்பதில் பிஸியாக உள்ளனர். இதனால், ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 3 சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி, இந்த சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். கடந்த மூன்று சீசன்களை காட்டிலும் இந்த சீசன் கொஞ்சம் சுமார்தான். குறிப்பாக, புகழின் காமெடிகள் பார்வையாளர்களை கொஞ்சம் சலிப்படைய செய்து இருக்கிறது. புகழ் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், புகழ் – தாமுவின் அப்பா மகன் பாசம் என்று ஓவராக cringeஆக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர்.

இந்த சூழலில், இந்த வாரம் கெட்டப் ரவுண்டில் காந்தாரா கெட்டப்பில் வந்துள்ளார் புகழ். இதை பார்த்த vj விஷால் கண் கலங்கி போனார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் எல்லை மீறுவதாகவும், காந்தாரா ஒரு குறிப்பிட்ட மக்களின் கலாச்சார உணர்வை போற்றும் ஒரு படம். அப்படிபட்ட கதாபாத்திரத்தை எதற்கு வேடிக்கையாக்குகிறீர்கள் என்று கொந்தளித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி