அதர்வா நடிச்சு எந்த படம் ஹிட் ஆச்சா? நீ ஒரு சின்ன சவுக்கு – செய்யாறு பாலுவை ரவுண்ட் கட்டி தாக்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
6 August 2023, 6:46 pm

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹேண்ட்ஸம் ஹீரோவாக இளம் பெண்ககளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா. முரளியின் மூத்த மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடிக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அழகு… நல்ல தோற்றம்… இளமை என பெண்கள்களின் பேவரைட் ஹீரோ லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி , இரும்புக் குதிரை, சண்டி வீரன், ஈட்டி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாதே, செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மக்கள் மனதில் பிரபலமான நடிகராக இடம்பிடித்திருக்கும் அதர்வாவை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் விமர்சித்து பேசியிருக்கிறார். அதில் அதர்வா நடிச்சு எந்த படம் ஹிட் ஆச்சு சொல்லுங்க? என கேட்டதோடு அதர்வா யாருகிட்ட கதை கேட்குறாரு? எந்த இயக்குனரை மதித்து அவர் கதை கேட்கிறார்?

ஒரு சம்பவம் சொல்றேன்… கொரோனாவுக்கு முன்னர் அதர்வா ஒரு படத்தில் கமிட் ஆகிறார். இதனிடையே லாக் டவுன் போட்டுவிடுகிறார்கள். பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியபோது அதர்வா உடல் எடை கூடி இருப்பதை பார்த்து இயக்குனர் உடை எடை குறைக்க சொல்லி சொல்கிறார். அதை அதர்வா தன்மான பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தனது மேலாளரை வைத்து இயக்குனரையே மிரட்டினார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதைக்கேட்ட நெட்டிசன்ஸ், உருட்டு உருட்டு நல்லா உருட்டு! அடுத்த சவுக்கு ஆவதற்கு நீயும் என்னென்னமோ கதை சொல்ற… அதெல்லாம் வேளைக்கு ஆகாது. அதர்வா நடிச்சு எந்த படம் ஹிட் ஆச்சா? முப்பொழுதும் உன் கற்பனைகள் 100 நாள் ஓடுச்சு, பரதேசி படத்திற்கு அதர்வா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியிருக்காரு… இமைக்கா நொடிகள் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிச்சுது… இது எதுவுமே தெரியாமல் எதையாச்சும் வந்து உளறாதே என நெட்டிசன்ஸ் விமர்சித்துத்தள்ளியுள்ளனர்.

Director -ஐ சீண்டிய Atharvaa..! - Cheyyaru Balu | IBC Tamil | Tamil Cinema | Kollywood | Red Card
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu