நமக்கு இது தேவையா..? ஓவர் சீன் போட்டு நயனுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்த மினி நடிகை..!

Author: Vignesh
17 March 2023, 2:30 pm

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

தெலுங்கில் நடிகை அனிகா சுரேந்தர் ஹீரோயினாக நடித்து வெளியான ‘புட்டபொம்மா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தாவணி போட்டு அடக்க ஒடுக்கமா நடித்த அனிகா அடுத்த படமான ஓ மை டார்லிங் படத்தில் டோட்டலா Change ஆகி படு கிளாமராக நடித்தது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

anikha surendran - updatenews360

அதிலும் ஹீரோவுடன் நடிகை அனிகா சுரேந்தர் கொடுக்கும் லிப் லாக் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கதைக்கு தேவை பட்டதால் தான் நடித்தேன் என்று நடிகை அனிகா சுரேந்தர் விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனிடையே, சமீபத்தில் நடந்த ஓ மை டார்லிங் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் இணையத்தில் பேசும் பொருளாக இருக்கிறது. அதாவது, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகை அனிகா சுரேந்தர் மேடையில் யாருக்கும் மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, நடிகை அனிகா சுரேந்தர் பேச அழைத்த போது ரியாக்ஷன் என்ற பெயரில் ஓவர் ஆட்டிடியூட் காமிச்சு, ஓவர் ஸ்டைலாக நின்று மேடையில் பேசி இப்படி ஓரிரு படத்தில் நடித்த உடனே ஓவர் ஆட்டிடியூட் காமிக்கிறீங்க என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்தும் வருகின்றனர். மேலும் நயனே இந்த அளவுக்கு Attitude காமிச்சது இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 924

    1

    1