தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருந்து வருபவர் தான் ஜாங்கிரி மதுமிதா. இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்து எல்லோரது மனதையும் கவர்ந்தார்.
இந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகச்சிறந்ததாக இருந்தது. ஜாங்கிரி மதுமிதாவாக நடித்திருந்த. அவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தில் மிகச் சிறந்த பர்பாமென்ஸ் செய்து அசத்திருந்தார் மதுமிதா.
அந்த படத்தை தொடர்ந்து அட்டகத்தி, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காக்கி சட்டை , முனி, திருநாள், கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, விசுவாசம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்திருக்கிறார்.
இதனடியே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளராக இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசி இருக்கும் நடிகை மதுமிதா, “நான் கர்ப்பமானதிலிருந்து என்னுடைய மகனிடம் சொல்லிக் கொடுத்து வளர்த்தது எனக்கு சினிமா தான் ஃபர்ஸ்ட் அதுக்கப்புறம் தான் நீ…. சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதால் என்னவெல்லாம் சுச்சுவேஷன் ஏற்படும். அது எல்லாத்தையும் நீ அக்செப்ட் செய்து கொள்ள வேண்டும்.
நான் படப்பிடிப்புகளுக்கு நடிக்க செல்லும்போது கேரவனில் இருந்து வெளியில் வரும் போது… என் மகனிடம், அம்மா வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது. உனக்கு பசித்தாலும் பொறுத்து தான் ஆக வேண்டும்…தூங்கிடுஎன்று சொல்லிவிட்டு செல்வேன் என கூறியுள்ளார்.
இதை கேட்ட நெட்டிசன்ஸ், இதுக்கு நீ குழந்தை பெத்துக்காமலே இருந்திருக்கலாம்…..எப்பேர்ப்பட்ட தாயும் தன் பிள்ளைகளுக்கு பிறகு தான் எல்லாமேனு தான் சொல்லுவா நீ என்னடான்னா “பசித்தாலும் பொறுத்துக்கோன்னு” சொல்லுற ச் சீ என விமர்சித்துள்ளனர்.