தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காத- 120 ரூபாய் பேச்சுக்கு MS பாஸ்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
14 June 2024, 4:29 pm

சினிமா துறையை பொறுத்தவரை நடிகர்கள் யோசிக்காமல் மேடையில் பேசும் சில விஷயங்கள் சர்ச்சைகளில் சிக்கி சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கும் வகையில் அமைகின்றது. அந்த வகையில், தற்போது நடிகர் எம் எஸ் பாஸ்கரன் நெட்டிசன்களின் ட்ரோல்களில் சிக்கி சின்னா பின்னமாகியுள்ளார்.

அதாவது, சமீபத்தில் லாந்தர் என்ற பட விழாவில் பேசிய அவர் உங்களுக்கு படம் பிடித்த அதனை நாலு பேரிடம் சொல்லுங்கள். அதுவே, ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை மற்றவர்களிடம் கூறி படம் பார்க்க செல்பவர்களை தடுக்காதீர்கள். எல்லாரும் படம் பார்க்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் 120 ரூபாயில் மாளிகை கட்டப் போவதில்லை. அனைவரும் வந்து படங்கள் பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை மறந்து விடாதீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

ms bhaskar

மேலும் படிக்க: ரஜினி பட நடிகைக்கு நடக்கும் அவசர கல்யாணம்.. அப்பாகிட்ட கூட சொல்லலையாம்..!

120 ரூபாய் வெச்சு கோபுரம் கட்டப்போவதில்லை. படம் பிடித்தால், நாலு பேரிடம் சொல்லுங்க நல்லா இல்லை என்றால் யாரிடமும் சொல்லாதீங்க, ஒரு படம் எடுக்க எத்தனை பேர் கஷ்டப்படுறாங்கன்னு தெரியுமா என்று அவர் கூறியது, தற்போது நெட்டிசன்கள் எம் எஸ் பாஸ்கரை ட்ரோல் செய்து வருகின்றனர். 120 ரூபாய் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என உங்களுக்கு தெரியுமா என அவரை கேள்வி கேட்டும் வருகின்றனர்.

ms bhaskar
  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!