Hard Disk கிடைச்சதா?.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் Instagram பதிவை ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
2 April 2024, 12:20 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுக்க வெளியான திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.

aishwarya-rajinikanth

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். அதே சமயம் படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்களின் கலவையான விமர்சனத்தை கூறி இருந்தனர்.

மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!

aishwarya-rajinikanth

மேலும், ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் லால் சலாம் படம் படு தோல்வியை சந்தித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. படம் வெளியாவதற்குமுன் பயங்கரமாக பில்டப் கொடுத்த ஐஸ்வர்யா ரிலீசுக்கு பின் ஒரு மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார்.

aishwarya

அதாவது, லால் சலாம் படத்தின் 21 நாள் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்க் தொலைந்துவிட்டதாகவும், அது இருந்திருந்தால் படத்தை இன்னும் நன்றாக கொடுத்திருக்க முடியும் என்றும் கூறியிருந்தார். இதனை கடுமையாக நெட்டிசின்கள் ட்ரோல் செய்து இருந்தனர்.

கடந்த மாசம் முழுவதும் திருப்பதி, காசி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று எடுத்த புகைப்படங்களையும் ஓம் நமச்சிவாய என பேப்பரில் எழுதிய புகைப்படத்தையும் பதிவிட்டு வந்தார். இதனை பார்த்தவர்கள் இவ்வளவு இடத்திற்கு செல்கிறீர்களே Hard Disk கிடைத்ததா என கேள்வி கேட்டு, கிண்டல் அடித்து வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 335

    0

    0