எனக்கு மட்டும் தா Wrongஆ கேட்குதா? தெலுங்கு ரஞ்சிதமே பாடலை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 2:30 pm

வாரிசு பொங்கல் ரிலீஸை கன்ஃபார்ம் செய்யும் விதமாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷன் டோலிவுட் ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில கட்டுப்பாடுகளால், வாரிசு சொன்னபடி ரிலீஸாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்றும், ஆந்திரா, தெலங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகராக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என, ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இதனால், பொங்கல் ரிலீஸை கன்ஃபார்ம் செய்யும் விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது வாரிசு படக்குழு.

வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டதால், விஜய் ரசிகர்கள் செம்ம ஹேப்பி மோடில் இருக்கின்றனர். மேலும், தற்போது வெளியான புதிய போஸ்டரையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ வெளியானது. தமன் இசையில் விஜய், மானசி இணைந்து பாடிய இந்தப் பாடலை நெட்டிசன்கள் செம்மையாக ட்ரோல் செய்தனர். ஆனாலும் அதையும் மீறி தற்போது வரை 230 மில்லியன் வீவ்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால், இந்த சாதனையையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழில் தாறுமாறான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வெளியானது முதல் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தாலும் டோலிவுட் ரசிகர்களுக்கு ரொம்பவே ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

தமிழில் விஜய் குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே, தெலுங்கிலும் தளபதியின் வாய்ஸில் தெறிக்க விடும் என டோலிவுட் ரசிகர்கள் தேவுடு காத்து வந்தனர்.

ஆனால், அங்கே விஜய்க்கு பதிலாக அனுராக் குல்கர்னி இந்தப் பாடலை பாடியுள்ளார். இதனால், தெலுங்கில் விஜய்யின் குரலில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை கேட்க நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கில் வெளியான பாடல் வரிகளை கேட்டால் வேறுமாறியாக உள்ளது. அதாவது சில வார்த்தைகள் தமிழில் உள்ள கெட்ட வார்த்தை போல உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Ranjithame - Vaarasudu Lyric Song  | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Thaman S
  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Close menu