கன்னாபின்னானு வந்த Comment .. சீரியல் நடிகை மகாலக்ஷ்மி எடுத்த அதிரடி முடிவு..! மகா Rocked.. நெட்டிசன்ஸ் shocked..!
Author: Vignesh17 October 2022, 5:00 pm
பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தனது காதலரான தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விவாகரத்தான மகாலட்சுமிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு சீரியல் நடிகர் ஈஸ்வரை மகாலட்சுமி காதலிப்பதாக தகவல் பரவியது.
ஆனால் ஈஸ்வரும் தானும் நண்பர்கள்தான் என்று கூறிய மகாலட்சுமி அதன்பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்தபோது அவருடன் மகாலட்சுமிக்கு காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகளாக தனது காதலை ரகசியமாக வைத்திருந்த அவர்கள் கடந்த செப்டல் ஒன்றாம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.
ரவீந்தரை மகாலட்சுமி பணத்திற்காகதான் திருமணம் செய்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் மகாலட்சுமி என்ன ஷேர் செய்தாலும் அதனை விமர்சிக்க காத்திருந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் மகாலட்சுமி தற்போது தனது போட்டோக்கள் சிலவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
வைலட் நிற சேலையில் கலக்கலாக உள்ளார் மகாலட்சுமி. ஒத்தையப்படி போன்ற சாலையில் காரின் முன்பு நின்றப்படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை லைக் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் மகாலட்சுமி கமெண்ட் ஆப்ஷன் டிஸெப்பில் செய்திருப்பதால் நெட்டிசன்களால் அந்த போட்டோவுக்கு கமெண்ட் செய்ய முடியவில்லை. கமெண்டுகளுக்கு பயந்துதான் மகாலட்சுமி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.